காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளை 'போராளிகள்' என குறிப்பிடும் BBC- மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுப் படுகொலை செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை (Terrorists) பிபிசி (British Broadcasting Corporation BBC) ஊடகமானது போராளிகள் - Militants என குறிப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம்; பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.

மேலும் பாகிஸ்தானின் Dawn, Samaa TV, ARY News, Geo News, Razi Naama, GNN, Irshad Bhatti உள்ளிட்ட 16 ஊடகங்களின் யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புக்கு நடுவே தற்போது பிபிசி (BBC) ஊடகமும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. பிபிசி ஊடகத்தில் பஹகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை- பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படுவது இல்லை. பயங்கரவாதிகளுக்கு மதிப்பு தரும் வகையில் 'போராளிகள்' என குறிப்பிடுகிறது பிபிசி ஊடகம். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள பிபிசியின் தலைமை நிர்வாகிக்கு இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசு கடிதமும் அனுப்பி வைத்துள்ளது.
ஏற்கனவே 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகள் தொடர்பான ஆவணப்பட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டியதால் பிபிசி ஊடகம், மத்திய அரசின் கண்டனத்துக்குள்ளானது. 2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது அந்த படுகொலைகள் நடந்தன. அதனால் மோடியை பிபிசி ஆவணப் படம் குற்றசாட்டுவதாக இருந்தது. இதனையடுத்து பிபிசி ஆவணப்படத்துக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications