வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை!

எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் நாளை ஜம்மு காஷ்மீர் வர வேண்டாம், அது காஷ்மீர் அமைதியை கெடுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் நாளை ஜம்மு காஷ்மீர் வர வேண்டாம், அது காஷ்மீர் அமைதியை கெடுக்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Kashmir Government opposes the delegation of Opposition leaders to visit SRINAGAR

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் காஷ்மீர் நிலைமையை பார்வையிட நாளை எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் செல்ல இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் அடங்கிய எதிர்க்கட்சிகள் குழு நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறது.

காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் தலைவர்கள் காஷ்மீர் செல்கின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கம்யூனிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி, திமுக எம்பி திருச்சி சிவா, டி.ராஜா ஆகியோர் காஷ்மீர் செல்கின்றனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் சார்பாக ஜம்மு காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புகள் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் செய்துள்ளது.

அதில், ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசு தீவிரமாக முயன்று வருகிறது.காஷ்மீரில் தீவிரவாதிகளிடம் இருந்தும், பிரிவினைவாதிகளிடம் இருந்தும், கலவரம் செய்பவர்களிடம் இருந்தும் அரசு மக்களை காத்து வருகிறது.

இப்படிப்பட்ட நேரத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் வர வேண்டாம். ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகளை அவர்கள் மீறும் நிலை உருவாகும். மக்களின் உயிரும், நாட்டின் அமைதியும்தான் அதிகம் முக்கியம். மூத்த தலைவர்கள் அதை உணர்ந்து காஷ்மீர் வரும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் மெதுவாக இயல்பு நிலை ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை மூத்த தலைவர்கள் தடுக்கும் பொருட்டு செயல்பட கூடாது. மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு தந்து மக்களின் அமைதிக்கு வழி வகுக்க வேண்டும். மூத்த தலைவர்கள் காஷ்மீர் வந்தால் மக்களுக்கு இடையூறாக இருக்கும், என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் நாளை எதிர்கட்சித் தலைவர்களின் குழு காஷ்மீரில் செல்வதில் பெரும் சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+