Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக அதிரடியில் இறங்கிய பாதுகாப்பு படை.. பஹல்காம் தாக்குதலுக்கு உதவிய நபர் கைது!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தினர். அந்தப் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்ற தீவிரவாதிகள், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளைச் சரமாரியாகச் சுட்டுக் கொண்டனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

Kashmir Man Arrested for Providing Logistical Support to Pahalgam Terrorists Amid Crackdown

உதவிய நபர் கைது

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தது. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இதற்கிடையே இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் குல்காம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.. இவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என போலீசார் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு இவர் தளவாட உதவிகளை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. கட்டாரியாவை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

சிக்கியது எப்படி

பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். அந்த தேடுதல் வேட்டையின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் தான் கட்டாரியா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் ஒப்பந்த ஊழியராகவும், உள்ளூர் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் வேலை செய்து வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது சில மாதங்களுக்கு முன்பிருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டத்திற்கு இவர் உதவத் தொடங்கியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு மாதங்களுக்கு முன்பே, குல்காம் வனப் பகுதிகள் வழியாக லஷ்கர் தீவிரவாதிகள் செல்வதற்குக் கட்டாரியா உதவியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இப்போது போலீசார் அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

தொடரும் அதிரடி

மற்றொரு புறம் தாக்குதல் நடத்தியவர்கள் ஜம்மு காஷ்மீருக்குள் கடந்த காலங்களில் ஊடுருவியுள்ளனரா.. அப்படி ஊடுருவி இருந்தால் அவர்களுக்கு உதவியது யார்.. அவர்களின் மறைவிடங்கள் எவை, அவர்களுக்கு உதவியது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் தான் பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அடைக்கலம் அளித்தாக சொல்லி இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகியோரை அப்போது அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது மூன்றாவது நபரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்துர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மே 7ம் தேதி பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' தாக்குதல்களை நடத்தியது. அதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+