அரசியல் சாசனத்தை கிழித்த பிடிபி எம்பிக்கள்.. சட்டையை கிழித்து கூச்சல்.. பகீர்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்கள் சேர்ந்து ராஜ்யசபாவில் அரசியல் சாசனத்தை கிழித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பொதுவாக மசோதா தாக்கல் செய்யும் முன் அதுகுறித்த காப்பி ஒன்று எம்பிக்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கொடுக்கப்படும். ஆனால் அமித் ஷா இன்று தாக்கல் செய்த இரண்டு மசோதாக்கள் குறித்து எம்பிக்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. அதேபோல் இந்த மசோதா மீதான விவாதம் நடத்தவும் வெறும் 1 மணி நேரம்தான் மக்களுக்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
PDP's RS MPs Nazir Ahmad Laway&MM Fayaz protest in Parliament premises after resolution revoking Article 370 from J&K moved by HM in Rajya Sabha; The 2 PDP MPs were asked to go out of the House after they attempted to tear the constitution. MM Fayaz also tore his kurta in protest pic.twitter.com/BtalUZMNCo
— ANI (@ANI) August 5, 2019
இந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் மிகப்பெரிய அளவில் மோதலும், வாய் சண்டையும் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்பிக்கள் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்களும் மசோதாவிற்கு எதிராக கூச்சல் இட தொடங்கினார்கள். அவைக்கு முன்பாக வந்து அவர்கள் மிக கடுமையாக கூச்சல் போட்டனர். ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துவிட்டது என்று மிக கடுமையான வார்த்தைகளால் மத்திய அரசுக்கு எதிராக கூச்சல் போட்டனர்.
Copy of the Indian Constitution torn in Rajya Sabha today by PDP MP Mir Mohammad Fayaz. Rajya Sabha Chairman M Venkaiah Naidu directed him to leave the House after this incident. pic.twitter.com/Mq1p9Nuovu
— ANI (@ANI) August 5, 2019
மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்கள் சேர்ந்து ராஜ்யசபாவில் அரசியல் சாசனத்தை கிழித்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்கள் தங்கள் சட்டையை கழற்றி அவையில் வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு உண்டானது.
இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சி எம்.பிக்களை சபையை விட்டு வெளியேற வெங்கையா நாயுடு உத்தரவு பிறப்பித்தார். காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அவையில் கூச்சலிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications