கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: கருணாநிதி வழக்கில் மத்திய அரசு பதில்
டெல்லி: கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துவிட்டது.
1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளது.

அத்துடன் இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கருணாநிதியின் மனுவில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications