கவிதா பயமறியாதவள்... நண்பர்கள் மீது சந்தேகமில்லை: பால்கனி தாவி பலியான பெண்ணின் பெற்றோர் தகவல்

பெங்களூர் ராஜாஜிநகரில் வசித்து வரும்கேரளாவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் கவிதா (வயது 31). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சகோதரியின் திருமண விழாவில் கலந்து கொள்ள பெங்களூர் வந்த கவிதா அமெரிக்கா திரும்பிச் செல்ல மனமின்றி இங்கேயே தங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு, பெற்றோர் கேரளாவுக்கு சென்று இருந்த காரணத்தால், தனது நண்பர்களுடன் கொடிகேஹள்ளியில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் கவிதா. அதிகாலை 2 மணி வரை நடந்த விருந்தில் கவிதாவும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் கவிதா கொடிகேஹள்ளி கனரா வங்கி லே-அவுட் ராஜீவ்காந்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரான கல்யாண் வர்மா என்பவரது வீட்டில் தங்குவதற்காக சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் கல்யாண் வர்மா வசித்து வருகிரார். அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அடுத்த மாடிக்குத் தாண்டப்போவதாக தெரிவித்துள்ளார் கவிதா. ஆனால், அதனை அசட்டைச் செய்த நண்பர்கள் உள்ளே உறங்கச் சென்று விட்டதாகத் தெரிகிறது.
ஆனால், சுமார் மூன்றரை அடி இடைவெளியில் இருந்த மற்றொரு பால்கனிக்குச் செல்வதைச் சவாலாக எடுத்துக் கொண்ட கவிதா, எதிர்பாராத விதமாக கால் தவறி 11-வது மாடியில் இருந்து தரை தளத்தில் விழுந்துள்ளார். இதில், அவரது தலை, கை, காலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடிகேஹள்ளி கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். நண்பர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், கவிதா மது அருந்தியதும், பால்கனிக்குத் தாவ முற்பட்டு பலியானதும் தெரிய வந்தது.
மேலும், இதுபற்றி கவிதாவின் பெற்றோர் போலீசாரிடம் கூறுகையில், "எனது மகள் மிகவும் மன தைரியம் படைத்தவள். கவிதா பயந்து நாங்கள் பார்த்தது இல்லை. கவிதாவின் நண்பர்கள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மாடியில் இருந்து அவளே தாண்டி இருப்பதை நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கவிதாவின் மரணத்தை விபத்து என பதிவு செய்த போலீசார் இதில் அவரது நண்பர்களுக்கு சம்பந்தமில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications