அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கு- கீர்த்தி ஆசாத்
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) முறைகேடு வழக்கு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீதும், இந்த வழக்கை மந்த கதியில் விசாரித்து வரும் சிபிஐ மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. கீர்த்தி ஆஸாத் தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், என் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடுக்க டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு அருண் ஜெட்லி ரகசியக் கடிதம் எழுதி உள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு தொடர்பு இல்லாதவர் (ஜெட்லி) சங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று அறிவுறையும் வழங்கியுள்ளார்.
கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட என்னை பாஜக மீண்டும் இணைத்துக் கொள்ளும்.
ஏற்கெனவே, நீதிபதி முகுல் முத்கல் வெளியிட்ட அறிக்கையைக் கொண்டு, அருண் ஜெட்லி மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும், வழக்கை மந்த கதியில் விசாரித்து வரும் சிபிஐக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.
குறிப்பிட்ட காலத்துக்குள் டிடிசிஏ முறைகேடு வழக்கை விசாரிக்க உத்தரவிடுமாறு அந்த மனுவில் குறிப்பிட உள்ளேன்.
கூண்டில் அடைக்கப்பட்ட கிளிபோல் உள்ள சிபிஐ, நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் தனது பணியை தொடங்கும் என்று தெரிகிறது," என்று கீர்த்தி ஆஸாத் தெரிவித்தார்.
அருண் ஜெட்லி மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்ததால் கட்சியிலிருந்து சமீபத்தில்தான் கீர்த்தி ஆஸாத்தை பாஜக இடைநீக்கம் செய்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications