காங்கிரஸ் தலைவர்களின் ஊழல்களை விசாரிப்போம்: ஆம் ஆத்மி உறுதி
டெல்லி: தங்கள் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம் என்று டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. எங்களது அரசு கவிழ்ந்தாலும், காங்கிரஸ் தலைவர்களது ஊழல்கள் குறித்து விசாரிப்போம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், கூறியதாவது:

ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தபோதிலும், அக்கட்சித் தலைவர்களுக்கு எதிரான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை நிறுத்த மாட்டோம் என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி எவ்வித கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை என்றும், எங்கள் கட்சியை சேர்ந்த 28 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே நம்பி உள்ளோம் என்றும் கூறிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடைய ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என ஆரம்பம் முதல் தமது கட்சி கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தங்கள் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
நிபந்தனைகள்
இதனிடையே கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்த அரசுகள் எவ்வளவு நாட்கள் நீடித்தன என்பதை பட்டியலிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண், காங்கிரஸ் கட்சியின் எவ்வித நிபந்தனைகளையும் தங்களது கட்சி ஏற்காது என்றார். ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த செயல் திட்டங்களின்படியே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றும், காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாவும் ஒன்றாக கரம் கோர்த்து எங்களது ஆட்சியை கவிழ்த்தால், அது அந்த கட்சிகளுடைய விருப்பம் என்றும் அவர் மேலும் கூறினார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications