உத்தரகாண்ட் தேர்தல்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் Ajay Kothiyal அறிவிப்பு
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் Ajay Kothiyal அறிவிக்கப்பட்டுள்ளார்.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உ.பி. உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு காங். தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். உ.பி. மாநிலத்தில் பீகார் மாநில அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி இருக்கின்றன.
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் Ajay Kothiyal அறிவிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதனை அறிவித்துள்ளார். டேராடூனில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
அரசியல்வாதிகள் அரசாங்க சொத்தை சூறையாடுகின்றனர். மக்களுக்கும் இத்தகைய அரசியல்வாதிகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணுவ அதிகாரியை முதல்வராக்க ஆம் ஆத்மி முன்வந்துள்ளது. பாஜக கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலத்தை நாசமாக்கிவிட்டது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
தாம் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்னல் Ajay Kothiyal கூறுகையில், கங்கோத்ரி இடைத்தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி எனக்கு வாய்ப்பு அளித்திருந்தது. கங்கோத்ரியின் பல பகுதிகளில் நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். மக்கள் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இந்த முறை மக்கள் வெற்றி பெறுவர். இவ்வாறு ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் Ajay Kothiyal கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications