மும்பையில் 'மொய் விருந்துக்கு' கேஜ்ரிவால் ஏற்பாடு! ஒரு பிளேட்டுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே!
மும்பை: ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் நிதிக்காக மும்பையில் இன்று சின்னகவுண்டர் படத்தில் வரும் சுகன்யா கேரக்டரை போல சாப்பாடு போட்டு மொய் விருந்து வசூலிக்க உள்ளதாம். ஆனால் ஒரு சாப்பாட்டுக்கு ரூ.20 ஆயிரம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் நிர்ணயித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி மும்முரம் காண்பிக்கிறது. இதையடுத்து கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில் மும்பையில் இன்று இரவு மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இதில் பங்கேற்கிறார்.

பாலிவுட் கலைஞர்கள், வங்கியாளர்கள், வைர வியாபாரிகளுக்கு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுல்ளது. மொத்தம் 200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாப்பாட்டுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்பது நிபந்தனை. இந்த மொய் விருந்தில் சுமார் ரூ.40 ல்டசம் வசூலாகும் என்று ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.
இதனிடையே டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான ஜி.வி.எல்நரசிம்மராவ், "ஆம் ஆத்மிக்கு அருமையான ஒரு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மக்களை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். சந்தர்ப்பவாதிகள் என்பதை காங்கிரசோடு கூட்டணி வைத்து நிரூபித்துவிட்டனர். இதற்கு முன்பும் மொய் விருந்தில் மக்கள் பணத்தை கொட்டி கொடுத்தனர். ஆம் ஆத்மி தங்களுக்கு ஏதாவது நல்லது செய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஆம் ஆத்மி தவறிவிட்டது" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications