டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றார்! சிசோடியா உட்பட 6 அமைச்சர்களும் பதவியேற்பு!!
டெல்லி: டெல்லியின் 8வது முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் பதவி ஏற்றார். அவருடன் மணிஷ் சிசோடியா உட்பட 6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-ஐ வென்று ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் வெற்றிக்கு பின்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் முதல்வரான கேஜ்ரிவால்
இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து உரிமை கோரினார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று பகல் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

6 அமைச்சர்கள் பதவியேற்பு
கேஜ்ரிவாலைத் தொடர்ந்து மணிஷ் சிசோடியா, அசீம் அகமது, சந்தீப்குமார், சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், ஜிதேந்திரசிங் தோமர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் நஜீப் ஜங் பதவியேற்பு செய்து வைத்தார். இதற்காக ராம்லீலா மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Arvind Kejriwal and cabinet ministers of Delhi take oath at Ramleela Maidaan pic.twitter.com/htiOPirmgx
— ANI (@ANI_news) February 14, 2015 2013-ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் 28 இடங்களைப் பெற்றிருந்த ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் 49 நாட்கள் ஆட்சி நடத்தினார்.
பின்னர் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி 14-ந் தேதிதான் டெல்லி மாநில முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்திருந்தார். தற்போதும் பிப்ரவரி 14-ந் தேதி டெல்லி முதல்வராக 2வது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications