"முல்லைப் பெரியாறு அணை பலவீனம்- புதிய அணை கட்டனும்".. 'சந்தைக்கு போகனும் ஆத்தா வையும்' கதையாக கேரளா!
டெல்லி: தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; ஆகையால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரளா மாநில அரசு மீண்டும் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை நூற்றாண்டுகளைக் கடந்தும் வலுவாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெற்று வருகின்றன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. ஆனால் கேரளா அரசுகள் காலந்தோறும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது; முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்; முல்லைப் பெரியாறு அணையால் கேரளா அழிந்துவிடும்; முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரளாவே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற பல்லவியை பாடி வருகிறது. கேரளா அரசியல்வாதிகள்தான் என்றில்லை.. கேரளா திரைப்படங்களும் இதே லாவணிக் கச்சேரியைத்தான் பாடி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்திலும் இதே ஒப்பாரியையே கேரளா முன்வைத்து வருகிறது. ஆனாலும் உச்சநீதிமன்றம், எத்தனையோ குழுக்கள் அமைத்து ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது.. அத்தனை குழுக்களுமே முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்கின்றன. இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனையோ நிலநடுக்கம், புயல், மழை வந்த போதும் அவற்றை எதிர்கொள்ளக் கூடியதாக வலுவான நிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது என கேரளாவின் முகத்தில் அறைந்தது போல பதில் சொல்லிவிட்டது.
இந்த பின்னணியில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதிலும், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற லாவணி பல்லவியையே கேரளா மாநில அரசு பாடியிருக்கிறது.

16 வயதினிலே திரைப்படத்தில் சப்பாணி வேடத்தில் நடித்த கமல்ஹாசன், சந்தைக்குப் போகனும்.. ஆத்தா வையும் என்கிற வசனத்தை திரும்ப திரும்ப உச்சரிப்பார்.. அதேபோலதான் கேரளாவும், முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications