மலை உச்சி.. காதலியுடன் தனிமையில் அலெக்ஸ்.. 300 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு.. விபரீத முடிவு
இடுக்கி: தனிமையில் சந்தித்த காதலியுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட காதலன், 300 அடி பள்ளத்தில் அவரை தள்ளிவிட்டார். அத்துடன் மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழா அருகே மேலுகாவு என்ற ஊரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் இவருக்கு 25 வயது ஆகிறது. இவர் இதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மீனாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் பெற்றோருக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்தது. இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர்கள் வீட்டை விட்டு ஓடினார்கள். இதனால் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அலெக்ஸ் மற்றும் இளம்பெண் மீனாவை தேடி வந்தார்கள்.

போலீசார் தேடல்
போலீசாரின் விசாரணையில், அலெக்ஸ் தனது பைக்கில் நாடுகாணிசுரம் என்ற மலையில் காட்சி முனை அருகே வந்தது தெரிந்தது. அங்கு போய் பார்த்த போது பைக் இருந்தது. அவர்கள் அருகில் இருந்த பெரிய மலை மற்றும் அருவிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடினார்கள்..

காதலி மாயம்
அப்போது அலெக்ஸ் அங்குள்ள மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இளம்பெண் மீனா எங்கே இருக்கிறார் என்று தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனையடுத்து அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் போலீசார் இறங்கி தேடினார்கள்,

பிரேதபரிசோதனை
அப்போது இளம்பெண் மீனா படுகாயங்களுடன் மயங்கிபடி இருந்தார்,. அவரை போலீசார் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அலெக்சின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

தனிமையில் சந்திப்பு
இது குறித்து போலீசார் கூறுகையில், அலெக்சின் காதலுக்கு காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள்.. அதன்படி மலைப்பகுதியில் சந்தித்துள்ளனர். ஆபத்தான காட்சி முனையில் அமர்ந்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த அலெக்ஸ் இளம்பெண்ணை 300 அடி பள்ளத்தில் தள்ளி விட்டுடிருக்கிறார்.

காதலன் தற்கொலை
இளம்பெண் பாறைகளில் அங்குமிங்கும் மோதி பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.. ஆத்திரத்தில் காதலியை பள்ளத்தில் தள்ளிவிட்ட பின் அலெக்ஸ் இளம்பெண்ணை தேடியுள்ளார். அப்போது இளம்பெண் கோரமாக ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்திருக்கிறார்.. இதனை பார்த்த அலெக்ஸ் இளம்பெண் இறந்து விட்டதாக பயந்து மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். என்ன பிரச்சனை என்பது அந்த பெண் கணவிழித்த பின்னரே தெரியும் என்றார்கள்
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications