ரயில் புறப்பட தாமதமானதால் தலைமைச் செயலகத்திற்கு நடந்தே சென்ற கேரள முதல்வர்!
திருவனந்தபுரம்: ரயில் புறப்பட காலதாமதம் ஆனதால், பிளாட்பாரத்தில் இறங்கி பொதுமக்களோடு நடக்க ஆரம்பித்துள்ளார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.
முதல்வர் என்பவர் மக்களின் சேவகன். ஆனால் முதல்வரை மக்களின் தலைவர் என்பதை போலவும், கடவுள் என்பதை போலவும் மாற்றி வைத்துள்ளதன் விளைவு, இப்போது சாமானிய நிகழ்வுகளும் செய்தி முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோன்றதுதான் கேரள முதல்வரின் ஒரு செயலும்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மலப்புரம் பகுதியில் கட்சி பிரச்சார பணியாற்றிவிட்டு, நேற்று தலைநகர் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் பயணித்த மாவலி எக்ஸ்பிரஸ் ரயில், பெட்டா ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு 40 நிமிடங்களாக புறப்படவேயில்லை.
விசாரித்தபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது தெரியவந்தது. இதையறிந்ததும், உம்மன் சாண்டி உடனடியாக ரயிலில் இருந்து கீழே இறங்கி, பொதுமக்களோடு, ஒருவராக பிளாட்பார்மில் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் 3 கி.மீ தொலைவில் உள்ளது. எனவே நடந்தே சென்று தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உம்மன் சாண்டி முடிவு செய்திருந்தாராம்.
ஆனால், முதல்வர், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக, பெட்டா ரயில் நிலையத்தில் இறங்கிய தகவல் கிடைத்ததும், முதல்வர் அலுவலகம் சார்பில் திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அங்கு அனுப்பப்பட்டது. பிறகு அதில் ஏறி உம்மன் சாண்டி தலைமை செயலகம் சென்றடைந்தார்.
இதன்மூலம், குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications