Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலைக்குச் சென்ற குடியரசு தலைவர்! டிஎஸ்பியின் பதிவால் கேரள அரசியலில் பரபரப்பு! பரபரப்பான பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான்கு நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்ற குடியரசு தலைவர் திரவுபதி நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரது தரிசனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேரள மாநில காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் நிலையில் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சபரிமலை ஐயப்பனின் மூலவர் சிலையின் புகைப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (அக்.22) காலை சிறப்பு வழிபாடு செய்தார். அவருக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

நேற்று முன் தினம் மாலை டெல்லியில் இருந்து தனியார் விமானத்தில் திருவனந்தபுரம் வந்த திரவுபதி முர்முவை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Droupadi Murmu Sabarimala Controversy

திரவுபதி முர்மு

பின்னர், தேவசம் போர்டு அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர். நேற்று அதிகாலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலைக்கு வந்த திரவுபதி முர்மு, பாரம்பரிய மரபுப்படி இருமுடி கட்டி 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை செய்து, சந்தன பிரசாதம் வழங்கினார். வழிபாடு முடிந்ததும், குடியரசுத் தலைவர் மாளிகைப் புரத்தம்மன் கோயிலையும் தரிசித்து பம்பை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் திரும்பினார்.

கேரள டிஎஸ்பி

இதற்கிடையில், குடியரசுத் தலைவர் சபரிமலையில் வழிபட்டது தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "குடியரசுத் தலைவர் சபரிமலை வழக்கங்களைக் கடந்து நடந்துள்ளார். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதே செயலை முதல்வர் பினராயி விஜயன் செய்திருந்தால் என்ன விளைவாக இருந்திருக்கும்?" என பதிவிட்டிருந்தார்.

பாஜக போராட்டம்

இந்த பதிவு விரைவில் சமூக வலைதளங்களில், வைரலானது. இதனால் மனோஜ் குமாருக்கு எதிராக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலத்தூர் பகுதியில் பாஜக உறுப்பினர்கள் பேரணி நடத்தி, அந்த அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித் குமார், இந்த சர்ச்சை குறித்து மனோஜ் குமாரிடம் விளக்கம் கேட்க உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த பதிவு காவல்துறை நடத்தை விதிகளை மீறுவது போன்றது. அவரிடம் விளக்கம் பெற்றபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போலீஸ் நடவடிக்கை

இந்நிலையில், தனது பதிவு குறித்து பதிலளித்த டிஎஸ்பி மனோஜ் குமார், "ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு மெசேஜ் வந்தது. அதை தவறுதலாக ஸ்டேட்டஸாக போட்டு விட்டேன். எனக்குத் தெரியாமல் அது வெளியானது. நண்பர்கள் சொல்லியபின் உடனே நீக்கி விட்டேன்," என விளக்கம் அளித்துள்ளார். திரவுபதி முர்முவின் சபரிமலை வழிபாடு குறித்து உருவான இந்த சர்ச்சை தற்போது கேரள அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+