லட்சக்கணக்கில் தமிழர்கள் போன் செய்கிறார்கள்.. உதவிகள் குவிகிறது.. கேரள எம்பி நெகிழ்ச்சி
கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் லட்சக்கணக்கில் தினமும் போன் செய்வதாக கேரளா எம்பி ராஜேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் லட்சக்கணக்கில் தினமும் போன் செய்வதாக பாலக்காடு பகுதியை சேர்ந்த கேரளா எம்பி ராஜேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
கேரளாவில் மீட்பு அணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்து அங்கு உதவிகள் குவிந்து வருகிறது.
கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

உதவி
கேரளா வெள்ளத்திற்கு தமிழர்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். கேரளாவில் வெள்ளம் என்று தெரிந்தவுடன் உதவி செய்ய தமிழர்கள் வேகமாக களமிறங்கினார்கள். பல மாவட்டங்களில் இருந்து உதவி பொருட்களை கேரளாவிற்கு அனுப்பினார்கள். தொடர்ச்சியாக இப்போதும் அனுப்பி வருகிறார்கள்.

அதிகமான பேர் உதவி
அதோடு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளும் கேரளாவிற்கு உதவி செய்ய களமிறங்கினார். கேரளாவிற்கு சென்ற உதவி வாகனங்களில் அதிகமானது தமிழ்நாட்டில் இருந்து சென்றதுதான் என்று அவர்களே சந்தோசமாக பாராட்டி இருக்கிறார்கள். பொருள் உதவி மட்டுமில்லாமல், ஆள் உதவியும் செய்து இருக்கிறார்கள்.

போன் உதவி
இந்த நிலையில்தான் கேரளா எம்பி ராஜேஷ் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ''தினமும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கில் போன் வந்து கொண்டே இருக்கிறது. வெள்ளம் என்று தெரிந்தவுடன் அதிக மக்கள் உதவி செய்ய களமிறங்கி வந்தனர். தொடர்ந்து எங்கள் பகுதிக்கு அவர்கள்தான் உணவுகளையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறார்கள். தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்'' என்றுள்ளார்.

தவறான கருத்து
மேலும் ''தமிழர்களுக்கு எதிராக இங்கே சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியே தேவையில்லை. இங்கு உதவு செய்பவர்களை கூட அவர்கள் அப்படித்தான் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் இப்போது செய்யும் உதவியை மறக்க மாட்டோம்'' என்றுள்ளார்.
-
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications