ஓ போடு.. ஓஹோ.. கேரள மக்களை உற்சாகப்படுத்திய தமிழ் ஐஏஎஸ்.. கொண்டாடப்படும் ஆட்சியர் வாசுகி!
கேரளா மக்களுக்கு ஓ போட சொல்லிக்கொடுக்கும் வாசுகி ஐஏஎஸ் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளா மக்களுக்கு ஓ போட சொல்லிக்கொடுக்கும் வாசுகி ஐஏஎஸ் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
இவர் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர். கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.
அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
வரலாறு படைக்கிறோம்
இந்த நிலையில்தான் மீட்பு பணிகளை திருவனந்தபுரத்தில் ஒருங்கிணைத்த, அம்மாவட்ட ஆட்சியர் வாசுகி ஐஏஎஸ் அங்கு சேவை செய்த மக்களிடையே மிகவும் உருக்கமான உரை ஆற்றினார். நாம் இங்கு ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்திற்கு நாம் போராடியது போல இப்போது போராடி வருகிறோம். அரசுக்கு நீங்கள் மிகப்பெரிய உதவியை செய்து வருகிறீர்கள், என்று அங்கு உதவி செய்த எல்லா மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஓ போடு
இந்த நிலையில்தான் நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது, எதாவது நல்ல காரியம் செய்தால், ஓ போடுவோம், எல்லோரும் ஓஹோ என்று கத்துவார்கள். நாம் இங்கு நல்ல காரியம் செய்துள்ளோம், அதனால் நீங்களும் அப்படி செய்கிறார்களா என்று கேட்டுள்ளார். அதன்பின் ஓ என்று அவர் கத்த எல்லோரும் சேர்ந்து ஓஹோ என்று கத்தினார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
|
திருவனந்தபுரம் ஆட்சியர்
இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஆம் இவர் பிறந்தது சென்னையில்தான். சென்னையில்தான் படித்து வளர்ந்தார். தற்போது ஆட்சியாளராக திருவனந்தபுரத்தில் உள்ள இவர், மருத்துவக்கல்லூரி மாணவி என்பது கூடுதல் சிறப்பு.
|
காரணம் என்ன
இவர் ஆட்சியர் ஆக ஆசைப்பட்டதற்கும் இன்னொரு பேரிடர்தான் காரணம். இவர் சென்னையில் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் மாணவியாக இருந்த போது சுனாமி வந்தது. அப்போது ஆட்சியர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. பேரிடர் மீட்பு பணியில் செய்த பணிகளை பார்த்து ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பொருட்களை இவர் சிறப்பாக அனுப்பியதற்காக மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications