பெண்ணின் ஆவேசத்தில் சிக்கி "அறுபட்ட" கேரள சாமியார்.. உச்சா போக முடியாமல் அவதி!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இளம் பெண்ணின் ஆவேசத்தில் சிக்கி ஆணுறுப்பை பறி கொடுத்த சாமியாரின் நிலைமை மேம்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறினாலும் கூட அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் மூலம் மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்துள்ளனர்.
கொல்லத்தைச் சேர்ந்த இந்த சாமியாரின் பெயர் கங்கேசானந்தா என்கிற ஸ்ரீஹரியாகும். இவர் 23 வயதான சட்ட மாணவியை தொடர்ந்து 6 வருடமாக பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரது குடும்பத்தினரிடமும் முறைகேடாக பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு, மாணவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ய முயன்றுள்ளார் சாமியார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்த அந்த மாணவி, கத்தியை எடுத்து சாமியாரின் ஆணுறுப்பை ஆவேசமாக அறுத்துத் தள்ளி விட்டார்.

கதறிய சாமியார்
துடிதுடித்துக் கதறிய சாமியாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம்.

ஆணுறுப்பே இல்லை
அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் ஆணுறுப்பை முழுமையாக துண்டித்து எறியப்பட்டு விட்டதால் அவர் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

உச்சா போக முடியலை
சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார். அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மாற்று ஏற்பாட்டை மருத்துவர்கள் செய்துள்ளனர். அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.

வாங்கிக் கட்டிக் கொண்ட தரூர்
சம்பந்தப்பட்ட மாணவியின் செயலுக்கு முதல்வர் பினரயி விஜயன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதேசமயம், சசி தரூர் போன்ற சிலர் இதற்குக் கண்டனம் தெரிவித்து மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications