தமிழ்நாடு பாணியில் கேரளா.. மசோதாக்கள் விவகாரம்-ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல முடிவு!
திருவன்ந்தபுரம்: தமிழ்நாடு அரசைப் போல கேரளா மாநில அரசும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. கேரளா மாநில ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆளுநர்களுக்கு மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நிலையில் கேரளா அரசு இம்முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவி, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்தார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மாநில அரசுகளின் மசோதாக்களை நீண்டகாலம் ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது; ஆளுநர் மற்றும் ஜனாபதி ஆகியோர் மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க அதிகபட்சம் 4 மாதம் காலக்கெடு நிர்னயிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து தமக்கான சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக செயல்படுவது சட்டவிரோதம்; அரசியல் சாசனத்துக்கு எதிரனாது என்கிற உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மாநில கட்சிகள் பெரும்பாலும் வரவேற்றுள்ளன.
அதேநேரத்தில் கேரளா மாநில ஆளுநரான ராஜேந்திர அர்லேகர், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஆளுநர்களுக்கு அரசியல் சாசனம் கெடு விதிக்காத போது உச்சநீதிமன்றம் எப்படி விதிக்க முடியும்? உச்சநீதிமன்றமே அரசியல் சாசனத்தை திருத்துகிறதா? அப்படியானால் நாட்டில் நாடாளுமன்றம் எதற்காக இருக்கிறது என கொந்தளித்திருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில், ஆளுநரால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பாணியில் கேரளாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications