சியாச்சின் பனிச்சரிவில் உயிர்நீத்த கேரள ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
திருவனந்தபுரம்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுதேஷ்சின் குடும்பத்துக்கு மாநில அரசின் சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான பனிச்சரிவான சியாச்சினில் கடந்த 3ம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெட்ராஸ் ரெஜிமண்ட் படையைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதையடுத்து ராணுவ ஹலிகாப்டர் மூலம் வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது கர்நாடகாவை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் 6 நாட்களுக்குப்பின் கடந்த 9-ந் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவரும் நேற்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், கேரளாவைச் சேர்ந்த பி.சுதேஷ் என்பவரும் அடங்குவார். அவரது மறைவுக்கு மாநில அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் நேற்று அறிவித்தது. மேலும் ராணுவ வீரர் பி.சுதேஷின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications