கேரளாவில் மீண்டும் கிஸ் ஆப் லவ் போராட்டம்.... ஹனுமன் சேனாவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு!
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோட்டில் கிஸ் ஆப் லவ் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது ஹனுமன் சேனா என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவின் கோழிக்கோட்டில் காபி கடை ஒன்றில் காதல் ஜோடிகள் மீது ஒரு கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டித்து நடுத்தெருவில் முத்தமிடும் போராட்டத்தை பல்வேறு அமைப்பினர் நடத்தினர்.

கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தீவிரமாக இருந்தது மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன். இப்போராட்டத்துக்குப் பின்னர் இருவரும் பிரபலமாகிவிட்டனர்.
ஆனால் இந்த பிரபலத்தை பயன்படுத்தி இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட போலீசில் சிக்கி சிறையில் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் நேற்று மீண்டும் கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் நடுத்தெருவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொள்ளும் போராட்டம் நடைபெற்றது.
இதைக் கேள்விபட்டு அங்கு வந்த ஹனுமன் சேனா என்ற இந்துத்துவா அமைப்பினர் நடுத்தெருவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். இதன் பின்னர் இரு அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications