சபரிமலை செல்லும் பக்தர்களே, இனிமேல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லாதீர்கள்!
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரவும் சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். சபரிமலைக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் லட்சக் கணக்கில் வருகின்றனர். சபரிமலைக்கு வருகிற பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச்செல்வதால் சபரிமலை வனப்பகுதியில் மலைப்போல் குவிந்து வருகிறது. இதனால், சபரிமலையில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பொது நலமனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் எடுத்டுவர தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமச்சந்திர மேனன் மற்றும் தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு முடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் குடிநீர் பாட்டில்கள் உட்பட எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல கால பூஜையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை விவகாரம் குறித்து கவனித்து வருவதால் சன்னிதானம், பம்பா மற்றும் நிலக்கல் உட்பட சபரிமலையின் எந்தவொரு பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் உத்தரவை அடுத்து சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டி பொருட்களை எடுத்துச் செல்லாமல் தவிர்ப்பது நல்லது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications