ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 3 பேர் கேரளாவில் கைது.. தென் மாநிலங்களில் குண்டுகள் வைக்க திட்டமிட்டது அம்பலம்
திருவனந்தபுரம்: தென் மாநிலங்களில் பெரும் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மூவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னூர் மாவட்டம், சக்கரக்கல் பகுதியை சேர்ந்த ரஷீத், ரசாக் மற்றும் மிதிலாஜ் ஆகிய மூவரும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். சமீபத்தில், துருக்கி வழியாக, சிரியாவுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள முயன்றனர். ஆனால், துருக்கி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உண்மை தெரியவந்ததால் இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

கன்னூர் மாவட்டம் திரும்பிய இவர்களை வலபட்ணம் போலீசார் கைது செய்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பயங்கர ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், அதை பயன்படுத்தி தென் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான மூவருமே, ஆப்கானிஸ்தானின் இஸ்தான்புல் பகுதியில் சில காலம் தங்கியிருந்ததாக கன்னூர் மாவட்ட துணை எஸ்.பி சதானந்தன் கூறுகிறார். அதேநேரம், இவர்களை கைது செய்த பிறகும்கூட, இன்னும் தங்கள் ஆதரவாளர்கள் வெளியில் இருப்பதாக ஜிகாதி குரூப்புகள் தங்கள் சோஷியல் மீடியா தளங்களில் கூறி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications