சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த சட்ட கல்லூரி மாணவி.. கேரளாவில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெரும் சபலமானவராம் இவர்.

கணேஷனந்தாவுக்கும் ஒரு பெண்மணிக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே கள்ள உறவு இருந்துள்ளது. இந்த நிலையில், அவ்வப்போது பெண்மணியின் வீட்டுக்கு வந்த சென்ற சாமியார் ஒருகட்டத்தில் தாயுடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் மகளையும் பாலியல் உறவில் ஈடுபடுத்தியுள்ளார்.

கொடுமைக்கார தாய்

கொடுமைக்கார தாய்

சாமியாரிடமிருந்து கிடைத்த பணத்திற்காக, அப்பெண்ணின் தாயும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 12வது வகுப்பு படிக்கும் காலம் முதல் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் சாமியார். தற்போது 23வயதாகும் அந்த பெண் சட்டக் கல்லூரி மாணவி.

கத்தியால் வெட்டு

கத்தியால் வெட்டு

சாமியார் தனது தாயிடம் மட்டுமின்றி தன்னையும் தொடர்ந்து பயன்படுத்துவதால் கோபத்தில் இருந்துள்ளார் அந்த மாணவி. இந்த நிலையில், இன்று அதிகாலை தன்னிடம் உறவு கொள்ள கணேஷனந்தா வந்தபோது அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டிவிட்டார் அந்த மாணவி.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

ரத்தம் வடிந்த நிலையில், கணேஷனந்தாவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிலர் அனுமதித்தனர். அப்போது அவரது பிறப்புறுப்பு 90 சதவீதம் அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தேறி வருகிறார். இருப்பினும் ஆணுறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.

குழந்தைகளுக்கான சட்டம்

குழந்தைகளுக்கான சட்டம்

முதற்கட்ட விசாரணையில், தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது பிறப்புறுப்பை அறுத்ததாக மாணவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 23 வயது என்றபோதிலும், அவர் 12ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே சாமியார் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் கூறியுள்ளதால் பாஸ்கோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பாராட்டு

முதல்வர் பாராட்டு

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், அந்த மாணவியின் செயலை பாராட்டியுள்ளார். சட்டக் கல்லூரி மாணவியே சட்டத்தை கையில் எடுத்துள்ள போதிலும், முதல்வர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரத்தோடு அந்த பெண் செயல்பட்டதாக விஜயன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 23-year-old law student in Kerala allegedly chopped off the penis of a self-styled godman, who had been allegedly raping her for many years at her house.
Please Wait while comments are loading...