ஓணம் ஸ்பெஷல்... ‘ஓன்லைனில்’ மது விற்பனை... ‘குடிமகன்’களின் வசதிக்காக கேரள அரசு தடபுடல் ஏற்பாடு!
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி குடிமகன்களின் வசதிக்காக ஆன்லைன் மூலமாக மதுவை வாங்கும் வசதியை அறிமுகப் படுத்தவுள்ளது கேரள அரசு.
கேரளாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு படிப்படியாக மதுவிலக்கு என்ற திட்டத்தின்படி, 700க்கும் அதிகமான பார்களை மூடியது. இதனால் தற்போது நட்சத்திர ஓட்டல்கள் மற்றும், 'கன்ஸ்யூமர்பெட்' எனப்படும், கேரள அரசு நிறுவனம் நடத்தும் கடைகளில் மட்டுமே, தற்போது மது வகைகள் கிடைக்கின்றன.

தற்போது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசின் சார்பில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 10 நாட்களுக்கு முன்பே இந்த கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
எனவே, தொடர் விடுமுறையை முன்னிட்டு மதுவிற்பனையும் அதிகமாக இருக்கும். சொற்ப அளவில் உள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதும். வெயிலையும் பொருட்படுத்தாது வரிசையில் நின்று மதுவை வாங்கி, கடமையைக் கண் எனச் செய்வர்.
இதனால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் மது வகைகளை முன்பதிவு செய்யும் வசதியை, 'கன்ஸ்யூமர்பெட்' நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி, முன்பதிவு செய்து பெறும் ரசீதை, மதுக் கடைகளில் தனியாக அமைக்கப்படும் சிறப்பு கவுன்டரில் காட்டி, உடனடியாக மது வகைகளை பெற்றுச் செல்லலாம்.
இதற்காக, சிறு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications