கேரளாவில் ஆட்சியை இழக்கிறது காங். மீண்டும் இடதுசாரிகள் வெல்லும் வாய்ப்பு:டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
டெல்லி: டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடதுசாரி முன்னணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து கேரளா மாநிலத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. அதில், இடதுசாரி முன்னணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 86 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மற்ற கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

மொத்த வாக்குகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு 43.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 41.3 சதவீத வாக்குகளும்,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 9.7 சதவீத ஓட்டுக்களும் பிற கட்சிகளுக்கு 5.2 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
CVoter #OpinionPoll2016 seat share projection for Kerala (March 4th week): Chandy concedes ground pic.twitter.com/zzvA4vZ8tQ
— TIMES NOW (@TimesNow) April 1, 2016












Click it and Unblock the Notifications