For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

த(க)ண்ணீரில் கடவுளின் தேசம்.. முழு வீடும் அப்படியே ஆற்றில் மூழ்கிய காட்சி.. கேரளா வெள்ளத்தின் கோரம்

Google Oneindia Tamil News

கோட்டயம் : கேரளாவில் மிக கனமழை காரணமாக அபாய கட்டத்தை தாண்டி ஆற்றில் வெள்ளம் ஒடிய நிலையில், வீடு ஒன்று ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சியில் ஆற்றில் அதீத வெள்ளம் காரணமாக கரையோரத்தில் இருந்த வீடுகள் அப்படியே பெயர்த்து எடுத்து செல்லப்படுகிறது. இந்த இடம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் ஆகும்.

Recommended Video

    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்...கேரளாவை புரட்டி எடுக்கும் மழை.. பகீர் வீடியோ!

    கோட்டயம்: கடவுளின் தேசமான கேரளாவில் மிக அதீத கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது . கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டி வரும் அதீத மழையால் இருமாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 19 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர்.

    அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட்அலாரட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புலா, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுத்து இருந்தது. மேலும் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

    இ.பி.எஸ் நீக்கப்படுவார்.. ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்.. புகழேந்தி சொல்கிறார்இ.பி.எஸ் நீக்கப்படுவார்.. ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்.. புகழேந்தி சொல்கிறார்

    கோட்டயம் இடுக்கி

    கோட்டயம் இடுக்கி

    வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி நேற்று அதிகாலை முதலே கேரளாவின் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இரண்டு மாவட்டங்களுமே மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை அதிகம் கொண்ட பகுதிகள் என்பதால் அங்கு அதீத மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.

    13 பேர் பலி

    13 பேர் பலி

    கோட்டயம் மாவட்டம், கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அனைவரும் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    இடுக்கி

    இடுக்கி மாவட்டம், கொக்கையாறு அருகே உள்ள பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். மேலும், 10க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இடுக்கி மாவட்டத்தில் ஆன்சி என்ற பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் அடித்து செல்லப்பட்டது. இதில் இருந்த வாலிபரும், இளம்பெண்ணும் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். இருவர் சடலங்களும் மீட்கப்பட்டன.

    கோட்டயம்

    திருவனந்தபுரம் கண்ணம்மூலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி தீப் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானார். கோட்டயம் அருகே பூஞ்ஞாறில் அரசு பஸ் வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதியினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர்.

    மீட்பு பணி தீவிரம்

    மீட்பு பணி தீவிரம்

    கனமழையை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக ராணுவத்தின் உதவியை முதல்வர் பினராய் விஜயன் கேட்டுள்ளார். கோட்டயத்தில் மீட்பு பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. விமானப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டம், சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொச்சி விரைந்தன. மீட்பு பணிகளை ராணுவம் முழு வீச்சில் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கேரளாவிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

    அடித்துச்செல்லப்பட்ட வீடு

    அடித்துச்செல்லப்பட்ட வீடு

    இதனிடையே கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் பகுதியில் முழு வீடும் ஆற்றில் மூழ்கிய அதிர்ச்சி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மிக கனமழை காரணமாக அபாய கட்டத்தை தாண்டி ஆற்றில் வெள்ளம் ஒடிய நிலையில், வீடு ஒன்று ஆற்றில் அடித்து செல்லப்படும் அந்த காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    The house of Jebi, a native of Mundakkayam, was flooded. Several houses were washed away and people became trapped in the district of Kottayam in Kerala state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X