Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரூமில்.. பாயாசம் தந்த கணவர்.. அடுத்து பாம்பை ஏவி கொன்ற கொடூரம்.. கிலி கிளப்பும் கொல்லம்!!

பாம்புகளை ஏவி இளம்பெண்ணை கொன்ற கணவர் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கொல்லம்: உத்ராவை கொல்ல 2வது முறை பாம்பை ஏவி கடிக்க வைத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. அந்த பாம்பு கடித்தால் உத்ரா கத்தி அழாமல் இருக்க பாயாசத்தில் தூக்கமாத்திரையை கலந்து தந்து தூங்க வைத்துவிட்டு அதன்பிறகுதான் பாம்பை ஏவி கொன்றாராம் கணவர்.. தற்போதைய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!!

    kerala snakebite: husband confessed to kollam police

    மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார்.

    திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.. முதல்முறை பெட்ரூமில் பாம்பு கடித்து உத்ரா அலறியபோது, சூரஜ்தான் அந்த பாம்பை பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. இப்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்தது.

    உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.. அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார்.

    உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது... படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. பாம்பு கடிப்பதையும், உத்ரா துடிப்பதையும் பார்த்து கொண்டே நின்றிருக்கிறார் சூரஜ்... கொடிய வகை பாம்பு என்பதால், அதன் வலியும் மிக கடுமையாக இருந்திருக்கிறது.. துடிதுடித்து உத்ரா இறப்பதையும் பார்த்து கொண்டே நின்ற சூரஜ், அந்த ரூமிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துள்ளார். 8.30 மணிக்கெல்லாம் பாம்பை கடிக்க செய்துள்ளார்.. ஆனால் விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்.

    புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.. போகும்போது பாம்பு கொண்டு வந்த பாட்டிலை வெளியே வீசிவிட்டு போயிருக்கிறார்..இப்படி ஒரு கொலையை நாடே பார்த்தது இல்லை.. உத்ராவை கடித்த பாம்புக்கும் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது. உத்ரா கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. சூரஜை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒரு ஆற்றங்கல்லில் வைத்து சுரேஷ் அந்த பாம்பை பிடித்ததாக கூறுகிறார்... அதுமட்டுமல்ல, அங்கிருந்த பாம்பின் 10 முட்டைகளையும் அவரே எடுத்து சென்று, வீட்டில் அடைகாத்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளாராம்.. இப்போது அந்த குஞ்சுகளை அவரே ரகசியமாக வளர்த்து வருகிறாரா? இல்லை வெளியே கொண்டு போய் விட்டு விட்டு வந்துவிட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.. பாவம் உத்ரா... பாம்பைவிட கொடியவர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+