கேரளாவில் ஃபேஸ்புக்கில் அசிங்கமாக மெசேஜ் போட்ட பக்கத்துவீட்டுக்காரர்: தூக்கில் தொங்கிய இளம்பெண்
கொச்சி: ஃபேஸ்புக்கில் தன்னைப் பற்றி ஒருவர் அசிங்கமாக கருத்து தெரிவித்தது குறித்து போலீசில் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள சேரநல்லூரைச் சேர்ந்தவர் விஜிதா(27). அவரை பற்றி பக்கத்து வீட்டுக்காரரான ரதீஷ் ஃபேஸ்புக்
கில் அசிங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பே போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாங்கள் ரதீஷையும், விஜிதாவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேசினோம். இதையடுத்து ரதீஷ் ஃபேஸ்புக்கில் தான் விஜிதாவை பற்றி போஸ்ட் செய்தவற்றை டிலீட் செய்துவிட்டார். அப்படி இருக்கையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறக் கூடாது என்று சேரநல்லூர் காவல் நிலைய அதிகாரி வித்யாதர குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பிணமாகத் தொங்கியதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார்.
முன்னதாக விஜிதா இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
ரதீஷ் விஜிதாவுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ரதீஷ் குடும்பத்திற்கும், விஜிதாவின் குடும்பத்திற்கும் இடையே நிலத் தகராறு இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications