கேரள உள்கட்டமைப்பு மொத்தமாக மாறும்.. 30 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த அதானி நிறுவனம்
திருவனந்தபுரம்: கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டத்தை அதானி துறைமுகம் & SEZ நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டுகளில் இந்த முதலீடுகள் கேரளாவில் செய்யப்படுகின்றன. கேரளாவில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2025ல் இந்த அறிவிப்பு வெளியானது.
கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் வகையிலான திட்டத்தை அதானி நிறுவனம் அறிவித்துள்ளது. அதானி துறைமுகம் மற்றும் எஸ்.இ.இசட் லிமிட்டெட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, கேரளாவில் அடுத்த ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி முதலீட்டை அதானி நிறுவனம் செய்கிறது.

கேராளவில் நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாடு 2025-ல் இந்த முதலீட்டு திட்டத்தை அதானி குழுமம் அறிவித்தது. இதன், துறைமுகத்தை மேம்படுத்துதல், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கேரளாவை மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது.
விழிஞ்சம் துறைமுகம்
விழிஞ்சம் துறைமுகம் இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து முனையமாக உள்ளது. இந்த துறைமுகத்தில் அதிக முதலீடுகளை அதாவது 20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து முனையமாக நிலை நிறுத்தும் வகையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த துறைமுகம் மிக முக்கியமான பகுதியில் இருப்பதால், ஏற்கனவே உலகின் மிகவும் பிசியான துறைமுகங்களில் ஒன்றாக இது உள்ளது. 24 ஆயிரம் கண்டெய்னர் கப்பல்களை கையாண்டு இந்த துறைமுகம் வரலாறு படைத்துள்ளது. இந்திய துறைமுகத்தில் அதிக எண்ணிக்கையில் கையாண்டது இதுவே ஆகும்.
அதானி துறைமுகம் & SEZ லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கரண் அதானி இது தொடர்பாக கூறுகையில், " விழிஞ்சம் துறைமுகத்தை இந்தியாவின் கடல்சார் நிலப்பரப்பை மறுவரையறை செய்யும் வகையில், சர்வதேச கப்பல் போக்குவரத்து மையமாக விழிஞ்ஞத்தை மாற்றுவதே எங்களின் தொலை நோக்கு பார்வையாகும்" என்றார். விழிஞ்சம் துறைமுகம் திட்டத்தில் அதானி குழுமம் ஏற்கனவே ₹5,000 கோடியை முதலீடு செய்துள்ளது.
விமான நிலையம் விரிவாக்கம்
துறைமுகங்கள் மட்டும் இன்றி கேரளாவில் விமான இணைப்பு அதாவது ஏர் கனெக்டிவிட்டி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் தளவாட நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரம் கோடி முதலீட்டில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை புதுப்பிக்க உள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரத்தில் பயணிகளை கையாளும் திறன் 4.5 மில்லியனில் இருந்து 12 மில்லியனாக உயரும். விமான நிலையம் விரிவாக்கம் மூலமாக கேரளாவின் கனெக்டிவிட்டி மற்றும் சுற்றுலா வர்த்தகம் ஆகியவை உயரும்.
லாஜிஸ்டிக்ஸ், இ-வணிகம் மையம்
அதுபோக, கொச்சியில் உலகத்தரம் வாய்ந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இ - வணிகம் மையம் மற்றும் சிமெண்ட் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான வசதிகள் ஆகியவை கேரளாவின் தொழிற்துறையை மேலும் வலுப்படுத்தும். இந்த உச்சி மாநாட்டில் மேலும் பேசிய கரன் அதானி கூறும் போது, "சர்வதேச வர்த்தகத்தில் கேரளாவின் முக்கியத்துவத்தையும் முசிரிஸ் துறைமுக வரலாறு குறித்தும் பாராட்டி" பேசினர்.
மேலும் எளிதாக தொழில் தொடங்கவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான உகந்த சூழல் நிலவுவதிலும் கேரளாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பாராட்டினார். கேரளாவை வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி என்றும் அழைத்தார். பினராயி விஜயன், உம்மன் சாண்டி ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டி பேசிய கரன் அதானி, பிரதமர் மோடியின் வளர்ந்த பாரதம் குறித்தும் பேசினார். வளர்ந்த இந்தியாவுக்கு வலுவான பிராந்திய பொருளாதாரம் அவசியம் எனவும் அதற்கு கேரளா முதன்மையான முன்னுதாரணம் என்றும் கூறினார்.
அதானி குழுமத்தின் முதலீடு திட்டம் கேரளாவின் பொருளாதாரத்தை செழுமைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்குவதை காட்டும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், சர்வதேச இணைப்பை மேம்படுத்துதல், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் கேரளாவை நிச்சயமாக உலக அரங்கில் சக்திவாய்ந்த பொருளதார சக்தியாக நிலைநிறுத்தும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications