ம.பி. தேர்தல்: பாஜக Vs காங். - சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத், 3 மத்திய அமைச்சர்கள் எதிர்காலம்?
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் மொத்தம் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக, காங்கிரஸ் இடையே இம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது.

ம.பி. தேர்தல் களத்தின் முக்கிய வேட்பாளர்களும் தொகுதிகளும்:
முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்: 2005 முதல் 2018 வரையில் முதல்வராக இருந்தவர். 2020 முதல் தற்போது வரை ம.பி. முதல்வராக உள்ளார். 1990 முதல் புத்னி தொகுதியை கோட்டையாக வைத்துள்ளார். 2013-ல் இத்தொகுதியில் சுமார் 85,000 வாக்குகளில் வென்றவர் சவுகான். 2018 தேர்தலில் காங்கிரஸின் அருண் யாதவை 58,999 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றார். இம்முறை காங்கிரஸ் வேட்பாளரான விக்ரம் மஸ்தால், சவுகானை எதிர்த்து போட்டியிடுகிறார். டிவி நடிகரான விக்ரம் மஸ்தால் ராமாயண பாத்திரமான ஹனுமான் வேடத்தில் நடித்தவர்.
மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்: ம.பி. தேர்தல் களத்தில் உள்ள மூன்று மத்திய அமைச்சர்களில் நரேந்திர சிங் தோமர் ஒருவர். திமானி (டிமானி) தொகுதியில் போட்டியிடுகிறார். 2018 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி வென்ற தொகுதி.
மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல்: மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல், நரசிங்பூரில் போட்டியிடுகிறார். 2018 தேர்தலில் பாஜகவின் ஜலாம் சிங் படேல் 14,903 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் லகான் சிங் பட்டேலை தோற்கடித்த தொகுதி இது.
மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே (நிவாஸ்): மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே, நிவாஸ் பழங்குடிகள் தொகுதியில் போட்டியிடுகிறார். 2018 தேர்தலில் காங்கிரஸின் டாக்டர் அசோக் மார்ஸ்கோல் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ராம்பியாரே குலாஸ்தேவை தோற்கடித்த தொகுதி இது.
பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா: இந்தூர் 1 தொகுதியில் கைலாஷ் விஜயவர்கியா போட்டியிடுகிறார். 2018-ல் காங்கிரஸின் சஞ்சய் சுக்லா வென்ற தொகுதி. ம.பி. பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவர். சட்டசபை தேர்தல்களில் 6 முறை வென்றவர்.
கமல்நாத்: மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் முன்னாள் முதல்வர் கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். 2018-ல் முதல்வரான
பின்னர் 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் விவேக் சாஹுவை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் கமல்நாத். 9 முறை லோக்சபா எம்.பி.யாக இருந்தவர் கமல்நாத்.
ஜெய்வர்தன் சிங்: முன்னாள் முதல்வர் திக்விஜய சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங். திக்விஜய் சிங் குடும்பத்தின் கோட்டையான ரகோகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெய்வர்தன் சிங் 2018 இல் சுமார் 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தொகுதியில் வென்றார்.
ஜிது பட்வாரி: முன்னாள் அமைச்சர் ஜிது பட்வாரி (காங்கிரஸ்) இந்தூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள ராவ் தொகுதியில் போட்டியிடுகிறார். 2018 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் மது வர்மாவை 5703 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications