7% வளர்ச்சியில் ஜிடிபி, முதலீடுகள் நீண்ட காலத்திற்கு பிறகு அதிகரிக்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2019-20ம் நிதியாண்டில் 7 சதவீதமாக வளரும் என்று, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் குழுவினர் உருவாக்கிய 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, ராஜ்யசபாவில் இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையுள்ள முக்கிய சிறப்பம்சங்கள்:
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2018-19ல் வீழ்ச்சியடைந்த பின்னர் பொருளாதாரம் மீட்கப்படுவதை பார்க்க முடிகிறது. முந்தைய சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொருளாதார நிலைமை, தொடர்ந்து நிலையானதாக இருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7% ஆக உயரும் வாய்ப்புள்ளது.
- இந்த நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நாடு மாற, ஆண்டுக்கு 8% அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சியடைய வேண்டும்.
- தேவை, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வளர்ச்சி தேவை எனில், முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
- முதலீட்டு நடவடிக்கைகளில் வளர்ச்சி அதிகரிப்பதாக தெரிகிறது. 2011-12 முதல் முதலீடு குறைந்த நிலையில், இனி அதிகரிக்கும்.
- கிராமப்புற ஊதிய வளர்ச்சி 2018ம் ஆண்டு மத்திய பகுதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது
- அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தின் மீதான பிரச்சினைகளை விலக்கிவிடும்.
- பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று, ஒப்பந்தங்களை சரியாக அமல்படுத்துவது ஆகும். மேலும் சட்ட ரீதியில் வரும் பிரச்சினைகளை சரி செய்வதும் முக்கியமானது. சட்ட செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
- சேமிப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை நேர்மறையான பலன் தருபவை. முதலீட்டை விட சேமிப்பு அதிகரிக்க வேண்டும்.
- பொது நிதி பற்றாக்குறை 2019ம் நிதியாண்டில் 5.8% ஆக இருந்தது, கடந்த நிதியாண்டில் இது 6.4% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
- தேவை அதிகரித்துள்ளதால், முதலீட்டு விகிதம் 2020ம் நிதியாண்டில் அதிகமாகும்.
- இந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை குறையும்
- பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை தீர்மானிப்பதில் நுகர்வு, முக்கியமானதாக இருக்கும்
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications