மனைவி எட்டி உதைத்ததால் மாடியில் இருந்து விழுந்த கணவன் மருத்துவனையில் சேர்ப்பு!
காசியாபாத்: பூட்டிய வீட்டுக்குள் வைத்து மொத்தியிருந்தால் இப்படி வெளியுலகத்திற்கு தகவல் பரவியிருக்காது, ஆனால் மொட்டை மாடியில் வைத்து கணவனை மனைவி மிதித்ததால் அந்த சம்பவம் நாடு முழுவதும் பரவிவிட்டது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரிலுள்ள விஜய்நகர் பகுதியில் வசிப்பவர் அமித். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு சுமார் 12 மணிக்கு, அமித் தனது வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். கணவனை தேடிக் கொண்டு மாடிக்கு வந்த பூஜா, அமித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென பின்னால் இருந்து அமித்தை உதைத்துள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அமித், கால் தடுமாறி 12 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார்.
இதைப்பார்த்த சிலர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அமித்தை சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தொடர்புகொள்ள முயன்றனர், ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே மருத்துவமனையிலல் சிகிச்சை பெற்றுவரும் அமித், ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய சில சோதனைகள் எடுக்க வேண்டியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அமித் வாக்குமூலம் அளித்த பிறகுதான் உதைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications