உங்க குழந்தையின் ஆதாரை புதுப்பிச்சிட்டீங்களா?.. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி: 7 வயதைக் கடந்த குழந்தைகளின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களுடைய ஆதார் முடக்கப்படும் என்று யுஜடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) தெரிவித்துள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு எனும் ப்ளூ நிற ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ப்ரீ கேஜி, எல்கேஜி என எந்த வகுப்பாக இருந்தாலும் ஆதார் அட்டைகள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், குழந்தைகளுக்கான ப்ளூ நிற ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வந்தால் தங்களது தகவல்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பின்னரும் தங்களது கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற 'பயோமெட்ரிக்' விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள இசேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் குழந்தைகளின் தகவல்களைப் புதுப்பிக்கலாம். 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதேபோல, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரில் இணைக்கலாம். 7 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும் ஆதாருக்கு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
தங்களது ஆதார் விவரங்களை புதுப்பிக்காத குழந்தைகளின் ஆதாா் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு, ஆதார் புதுப்பிக்கக் கோரி யுஐடிஏஐ குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் புகைப்படம், பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமா்ப்பித்து ஆதார் பெறப்படுகின்றது. அப்போது அந்தக் குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் போன்றவை பெறப்படுவதில்லை.
குழந்தைகள் 5 வயது பூா்த்தி செய்தவுடன் ஆதாரில் அவா்களின் கைரேகை, கருவிழிகள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதுவே முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) என்று கூறப்படுகிறது. 5 வயது முதல் 7 வயது வரை இலவசமாகவே ஆதாரைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
7 வயதுக்கு மேல் ஆதாரை புதுப்பிப்பிக்க கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. 7 வயதைக் கடந்த பின்னும் குழந்தைகளின் 'பயோமெட்ரிக்' விவரங்களை புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications