"நாங்க இலவசமா போடும் சாப்பாடு.. உங்க ஜிடிபியை விட அதிகம்!" நேபாள மாணவர்களை மிரட்டிய ஒடிசா கல்லூரி?
புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி என்ற கல்லூரியில் நேபாளத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலையைத் தொடர்ந்து அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே அந்த கல்லூரியில் படிக்கும் நேபாள மாணவிகளை அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மிரட்டுவதாக வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எப்படி நமது நாட்டை சோர்ந்த மாணவ- மாணவிகள் படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்களோ.. அதேபோல நமது அண்டை நாடுகளில் இருந்தும் கூட பலரும் இந்தியாவுக்குப் படிக்க வருகிறார்கள்.

குறிப்பாக நேபாள நாட்டில் இருந்து கணிசமான அளவுக்கு மாணவ- மாணவிகள் இந்தியாவுக்குப் படிக்க வருகிறார்கள். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
தற்கொலை
அதன்படி நேபாள மாணவ- மாணவிகள் அதிகம் படிக்கும் கல்லூரிகளில் ஒன்றாக ஒடிசாவில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (கேஐஐடி) இருக்கிறது. இதற்கிடையே நேற்றைய தினம் இந்த கல்லூரியில் படித்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உயிரிழந்த மாணவி அங்கு பிடெக் படித்து வந்த பிரகிருதி லாம்சால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி வெளியானது முதலே அங்குப் பதற்றம் அதிகரித்தது. அங்குப் படித்து வந்த நேபாள மாணவ மாணவிகள் போராட்டத்தில் குடித்தனர். நேரம் செல்ல செல்ல போராட்டத்தால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னணி
லாம்சாலை அவரது முன்னாள் காதலன் துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் மிரட்டுவதாக அந்த பெண்ணின் உறவினரும் புகார் அளித்திருந்தார். மாணவியின் மரணத்திற்குப் பிறகு இது பேசுபொருளானது.
கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையிலும் கிட்டதட்ட அதே கருத்துகள் தான் கூறப்பட்டுள்ளது. அதில், "பி-டெக் மூன்றாம் ஆண்டு படிக்கும் நேபாள மாணவி நேற்று விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி கேஐஐடியில் படிக்கும் மற்றொரு மாணவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சில காரணங்களால் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
மிரட்டல்:
இதுபோன்ற போராட்டங்களால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள மாணவர்களை கல்லூரி ஆசிரியர்கள் மிரட்டுவதாகச் சொல்லி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கேள்வி எழுப்பும் மாணவ- மாணவிகளை நிர்வாகத்தினர் மிரட்டுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் ஜிடிபியை விட அதிகம்" என்று சொல்லித் திட்டுவதாகக் கூறப்படுகிறது.
a nepali student (Prakriti Lamsal) took her own life after being constantly harassed by her ex boyfriend (Advik Shrivastava) at KIIT University, India.
— devin (@realGodfr) February 17, 2025
This is how the university authority is treating Nepali students after they demanded a proper investigation. pic.twitter.com/WkI03XRDhp
கட்டாய விடுப்பு
அதேநேரம் இந்த சம்பவம் உண்மை தானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. நெட்டிசன்கள் இந்த காணொளியைப் பரப்பி வரும் நிலையில், பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். நேற்றிரவு மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அமைதி காக்குமாறு மூத்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக நேபாள மாணவர்களை விடுமுறையில் செல்லும்படி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications