டெல்லியில் 3ம் வகுப்பு மாணவன் கொலையில் திருப்பம்.. கொலை செய்ததாக பிளஸ் 1 மாணவன் பர பர வாக்குமூலம்!
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதில் வழக்கில் புதிய திருப்பம் உருவாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்பட்டது. தற்போது அந்த மாணவன் தான் செய்த கொலையை தனது பெற்றோர்கள் முன்னிலையில் ஒப்புக்கொண்டு இருக்கிறான்.

பள்ளி கழிவறையில் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர்.போலீசார் அந்த பள்ளியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் பாதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்தது தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் அந்த சிறுவனை கொடூரமாக உள்ளே இழுத்து சென்றதும் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து அந்த கண்டெக்டர் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவனும் சம்பந்தம்
அதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த கொலையில் புதிய திருப்பம் ஒன்று உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த கொலைக்கு அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவனும் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கொலையில் முக்கிய குற்றவாளி அந்த பஸ் கண்டெக்டர் இல்லை இந்த மாணவன் தான் என கூறப்படுகிறது. இவனுடன் இன்னும் 5 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தவறு செய்த போலீஸ்
இந்த நிலையில் இந்த வழக்கை போலீசார் தொடக்கத்தில் இருந்தே தவறாக அணுகி வந்து இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி இருக்கிறது. இறந்த மாணவனின் பிரேத பரிசோதனையில் அவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மருத்துவமனை கொடுத்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட் பொய்யானது என சிபிஐ கூறியிருக்கிறது. போலீஸ் வழக்கை முடிப்பதற்காக தேவையில்லாமல் பஸ் கண்டெக்டர் மீது பழி போட்டு இருக்கிறது. பஸ் கண்டெக்டர் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என சிபிஐ கூறியுள்ளது.

கொலையை நானேதான் செய்தேன்
இந்த நிலையில் சிபிஐ நடத்திய விசாரணையியல் கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன் தனது கொலையை ஒப்புக் கொண்டு இருக்கிறான். மேலும் அவன் தான் கொலை செய்ததை விளக்கும் போது அந்த இடத்தில் அவனது பெற்றோர்களும், மூன்றாம் நபர் ஒருவரும் இருந்து இருக்கின்றனர். அவன் எங்கிருந்து கத்தியை வாங்கினான் என்பதையும் இந்த வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறான்.

காரணம் என்ன
இந்த கொலைக்கான காரணம் தற்போது தெளிவாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை பாலியல் துன்புறுத்தல் காரணமாக முதலில் நடத்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனபட்டது. ஆனால் பள்ளியில் நடக்க இருந்த தேர்வை நிறுத்துவதற்காகவே இந்த கொலை நடந்து இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மாணவன் இறந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என அப்படி செய்து இருக்கிறான்.

பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி இருக்கின்றனர். இந்த செய்தி குறித்து அவர்கள் கூறுகையில் "என் மகனை அவன் வெறும் தேர்வுக்காகவா கொன்றான். அவன் முகத்தை பார்த்து நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்'' என்றனர். மேலும் ''அவனை உடனே நாங்கள் பார்க்க வேண்டும்'' என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications