'அத்தாச்சி' கூட்டிய பஞ்சாயத்து.... சிக்கலில் பாஜக பெண் வேட்பாளர்!
சண்டிகர் சண்டிகர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் அனுபம் கெர்ரின் மனைவி கிரண் கெர்ருக்கு அவரது அண்ணன் மனைவியால் ஒரு சிக்கல் வந்துள்ளது.
கிரண் கெர் பாஜக சார்பில் சண்டிகரில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவரது அண்ணி தேர்தல் ஆணையத்தில் ஒரு புகாரைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கிரண் கெர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சண்டிகர் செக்டர் 8ஏ பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருவதாக கூறியிருக்கிறார். சண்டிகர் செக்டர் 17இ பகுதியில் உள்ள பூர்வீக வீட்டுக்கு 25 சதவீதம் சொத்துரிமையில் பங்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறானது.

இந்து கூட்டுக்குடும்பம் சொத்துரிமை சட்டப்படி, இதுநாள் வரையிலும் சொத்து பங்கு பிரிக்கப்படவில்லை. அந்த சொத்து தொடர்பாக நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கையில், சொத்தில் 25 சதவீதம் பங்கு இருப்பதாக கிரண் கூறியிருக்கிறார்.
மேலும், அவரது ஓட்டு அந்தேரி மேற்கு சட்டமன்ற தொகுதியில் தான் உள்ளது. அதில், மும்பை ஜூஹூ டாக்டர் ஏபி நாயர் ரோட்டில் உள்ள வீட்டில் கிரண் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோர்ட் சம்மன்களும் அந்த முகவரிக்குதான் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
எனவே, தவறான தகவல்களை அளித்துள்ள கிரண் கெர்ரின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதினி ரூபத்தில் இப்படி ஒரு சிக்கலா என்று கிரண் கெர் டென்ஷனாக இருக்கிறாராம்.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications