மாநில அமைச்சர் சொல்லி நான் கேட்பதா.. கர்நாடக அமைச்சரிடம் சீறிய நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

மடிகேரி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். கர்நாடகாவில் அம்மாநில அமைச்சரை பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து பகிரங்கமாக கடிந்து கொண்டுள்ளார் அவர்.

கேரளாவைப் போலவே கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக, சில கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. பல பகுதிகளில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சரும், கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான, நிர்மலா சீதாராமன் நேற்று சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதன்பிறகு, குடகு மாவட்ட தலைநகரான மடிகேரியில் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இதில் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள சாரா மகேஷ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் கே.சி.கரியப்பா, ஓய்வு பெற்ற விங் கமாண்டர் குமார், ஓய்வு பெற்ற மேஜர் நந்தா நஞ்சப்பா உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களும் அங்கு கூடியிருந்தனர்.

மீட்பு படையினர்

மீட்பு படையினர்

இந்த நிலையில், குறுக்கிட்ட அமைச்சர் சாரா மகேஷ், நிர்மலா சீதாராமன் அருகே, சென்று "குடகு மாவட்டத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பல துறை அதிகாரிகள் சிலர் உங்களை சந்தித்து அறிக்கை சமர்ப்பிக்க விரும்புகின்றனர், அவர்களை பார்த்து விட்டு வந்து விட்டால் அவர்கள் திரும்பி விடுவார்கள். அதன் பிறகு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தலாமே" என்று தெரிவித்தார்.

கடும் கோபம்

கடும் கோபம்

அமைச்சர் மகேஷ், மீட்பு பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக இவ்வாறு கூறினாலும் கூட, நிர்மலா சீதாராமனுக்கு கோபம் உச்சியில் ஏறியது. ஒரு மாநில அமைச்சர், மத்திய அமைச்சருக்கு நிகழ்ச்சி நிரல் கொடுப்பதா? எனக்கு இது ஆச்சரியமாக உள்ளது என்று மைக் ஆனில் இருக்கும்போதே மீடியாக்களுக்கு கேட்கும் வகையில் பேசினார்.

எனக்கு பரிவார் முக்கியம்

எனக்கு பரிவார் முக்கியம்

மேலும் குடகு மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிட்டு வடிவமைத்த நிகழ்ச்சி நிரல்படி, எனது நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதை மீற விரும்பவில்லை. உங்களுக்கு அதிகாரிகள் முக்கியம் என்றால் எனக்கு எனது பரிவார் (முன்னாள் ராணுவ அதிகாரிகள்) முக்கியம். மீட்புப் பணியில் ஈடுபடாமல் இங்கே வந்து உங்கள் அதிகாரிகள் கால விரயம் செய்ய வேண்டாம் என்று கோபமாக தெரிவித்தார். கலெக்டரிடமும், அமைச்சரிடமும் மாறி மாறி தனது கோபத்தை அவர் காட்டினார்.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

அப்போது மீடியாக்கள் அதை புகைப்படமும், வீடியோவும் எடுத்து கொண்டிருந்ததையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதன்பிறகு தனது முடிவு படியே அவர் செயல்பட்டார். வந்திருந்த மீட்பு குழு அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஏற்கெனவே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை அனுப்பி வைத்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நன்றி என்று பதிலளித்து, அது குறித்து விளக்கம் அளிக்க மறுத்தவர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+