கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூக்கு முட்ட குடி! ரெட் லைட் ஏரியாவிலும் அடங்காத ஆசை.. கொலையாளி பகீர்
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கொலையாளி மதுகுடித்து விட்டு ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் கொலையாளி என கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சஞ்சய் ராயிரம் நேற்று முன்தினம் மத்திய தடையியல் ஆய்வுக் குழுவினர் சிபிஐ இணைந்து மூன்று மணி நேரம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி இருக்கின்றனர். அப்போது பேசிய சஞ்சய் ராய், கடந்த எட்டாம் தேதி சஞ்சய் ராயும் அவரது நண்பரும் அளவுக்கு அதிகமாக மது குடித்திருக்கின்றனர். இருவரும் ஒன்றாக சென்று கொல்கத்தாவில் இரண்டு சிகப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்று இருக்கின்றனர். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
தொடர்ந்து காதலியிடம் பேசிய சஞ்சய் ராய் அவரது ஆடை இல்லா புகைப்படங்களை அனுப்புமாறு கூறியிருக்கிறார். இதை அடுத்து ஒன்பதாம் தேதி அதிகாலை ஆர்ஜி கர் மருத்துவமனை கருத்தரங்கு பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு மருத்துவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார். பின்னர் கொல்கத்தா காவலர் குடியிருப்பில் உள்ள நண்பர் அனுபம் தாத்தாவின் வீட்டிற்கு சென்றதாக கூறி இருக்கிறார்.
முன்னதாக தான் நிரபராதி என சஞ்சய் ராய் அழுது புலம்பிய நிலையில், தற்போது உண்மை கண்டறியும் சோதனையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications