கொல்கத்தா கொடூரம்.. எல்லாம் எங்கள் சகோதரிக்காக.! இரவிலும் தொடர்ந்த போராட்டம்.. அரசுக்கு 5 டிமாண்ட்!
கொல்கத்தா: மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த மாதம் முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமான கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிரம் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் கொலையாளி என கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களை கடந்து போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளை மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்தும் பணிக்குத் திரும்பாமல் ஆர்ஜி கார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை விட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் அழைப்பு விடுத்தும் காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் கொல்கத்தா மருத்துவச் செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்குவங்க தலைமைச் செயலர் மனோஜ் பண்ட், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும், அதற்காக பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும், நோயாளிகள் கருத்தில் கொண்டு 12 முதல் 15 நபர்கள் அடங்கிய பேச்சுவார்த்தை குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு வரலாம் என கூறினர். ஆனால் 30 பேர் அடங்கிய குழு தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் எனக்கூறி அந்த அழைப்பை போராட்டக் குழு நிராகரித்துவிட்டது.
மேலும் இது தொடர்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். அதாவது மருத்துவ மாணவியின் கொலைக்கு காரணமானவர்களையும், அதன் தடயங்களை அழித்தவர்களுக்கும், உரிய தண்டனை அளிக்க வேண்டும், மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த சந்திப் கோஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கொல்கத்தா எஸ்பி வினித் கோயல் மருத்துவ செயலாளர் ராஜினாமா செய்ய வேண்டும், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சுகாதார நிறுவனங்களில் அச்சுறுத்தும் கலாச்சாரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் அரசு தரப்பில் வார்த்தை நடத்தும் போது அதனை லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அங்கிருந்து கிடைத்திருக்கும் தகவல்களின்படி மருத்துவ மாணவர்களின் போராட்டம் தற்போதைக்கு முடிவடையாது என்று கூறுகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications