செமினார் ரூமில் சடலத்தையும் விடாமல் பலாத்காரம் .. பெண் டாக்டர் கேஸ் சிபிஐக்கு மாறுதா? இன்று விசாரணை
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை, மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார் அந்த பெண் டாக்டர்.. 2 நாட்களுக்கு முன்பு, அதே மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார்... அன்றைய தினம் நைட் டியூட்டியில் இருந்தபோது, இவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள்..

கொடூரம்: இதுகுறித்து வெளியாகியிருந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், பெண் டாக்டரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டுள்ளது... பிறகு அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்... உடல் முழுக்க காயங்கள் இருந்துள்ளன..
அவரின் அந்தரங்க பாகங்களில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. அவரது கண்கள் மற்றும் வாய் இரண்டிலிருந்தும் ரத்தம் கசிந்திருந்தது.. முகத்தில் காயங்கள் மற்றும் ஒரு நகத்தில் காயம் இருந்தது. உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் இருந்திருக்கின்றன.
மம்தா உறுதி: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் ஒருவர் கைதாகி உள்ளார்.. மேலும், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது... "தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன்" என்று முதலமைச்சர் மம்தா உறுதி அளித்துள்ளார்.
நேற்றைய தினம், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதனிடையே, கொல்கத்தா ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.. இவ்வழக்கு நேற்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.எஸ் சிவஞானம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
விசாரணை: ஆனால், இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதால், இந்த பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது. எனினும், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், நாளை (இன்று) வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
தேசம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்திவரும் நிலையில், ஹைகோர்ட் என்ன சொல்லப்போகிறதோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குற்றவாளி: கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் வேறு யாராவது குற்றத்தில் ஈடுபட்டார்களா? என்று தெரியவில்லை.. இதுகுறித்து இப்போதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் போலீசார்..
இதனிடையே, அவசர வார்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2 பாதுகாப்பு நபர்களை மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்யாததற்காக பணியில் இருந்து நீக்கியுள்ளனர். காரணம், பெண் மருத்துவருக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு, இதுவே வழிவகுத்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்.
பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, டெல்லி உட்பட மத்திய மாநில அரசு மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்றும் போராட்டம் தொடர்கிறது.
அதேபோல, பெண் டாக்டர் கொடூரமான கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து, மருத்துவர்கள் இன்னும் மீளவில்லை.. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்த குழுவினர், சம்பந்தப்பட்ட ஆர்ஜி கார் அரசு மருத்துவமனைக்கு இன்று சென்றுள்ளனர்.. அங்கு அவர்கள் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications