கொல்கத்தா மருத்துவர் கூட்டு பலாத்காரம்? "டிஎன்ஏ ஆதாரம் முக்கியம்.." சிபிஐ சொன்ன முக்கிய தகவல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சிபிஐ தரப்பில் இப்போது பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அடுத்த வாரம் விசாரணை முடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது: இருப்பினும், அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டங்கள் நடந்தது. இதற்கிடையே அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது. தற்போது வரை கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது போலீசார் ஏற்கனவே கைது செய்த சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளியாக இருப்பார் என்றும் சிபிஐ தரப்பு கூறுகிறது.
விசாரணை அதன் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரம் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிபிஐ தரப்புக்கு மேற்கு வங்க முதல்வர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகளின் இந்த விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது..
அழுத்தம்: இது தொடர்பாகக் கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகையில், "கொல்கத்தா போலீசார் இந்த வழக்கை விசாரிக்க நான் ஐந்து நாட்கள் அவகாசம் கேட்டேன். ஆனால் அதைக் கூட தராமல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிவிட்டனர். அவர்களுக்கு நீதி தேவையில்லை. வழக்கைத் தாமதப்படுத்துவது மட்டுமே அவர்கள் நோக்கம். சிபிஐ விசாரிக்கத் தொடங்கிப் பல நாட்களாகிவிட்டன. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று சரமாரியாகச் சாடினார்.
முன்னதாக திரிணாமுல் அமைச்சர் பிரத்யா பாசுவும் சிபிஐ விசாரணை குறித்த தகவல்களைப் பகிர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறுகையில், "வழக்கு மாற்றப்பட்டு 23 நாட்கள் ஆகிவிட்டன. சிபிஐ எதையும் சொல்லவில்லை.. விசாரணையின் விரிவான அறிக்கையை நாங்கள் கேட்கிறோம்.. முன்பு கொல்கத்தா போலீசார் வழக்கை விசாரித்த போது செய்தியாளர்களிடம் என்ன நடந்தது என்ற தகவல்களைப் பகிர்ந்தார்கள். சிபிஐ எதையும் சொல்ல மறுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
சிபிஐ அதிகாரிகள்: இப்படி திரிணாமுல் தரப்பு தொடர்ச்சியாக சிபிஐ அதிகாரிகளை விமர்சித்து வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் வழக்கை முடிக்க உள்ளதாகக் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இப்போது சஞ்சய் ராயின் டிஎன்ஏவை சிபிஐ தரப்பு இப்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பயிற்சி மருத்துவரின் உடலில் கிடைத்த டிஎன்ஏ உடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க உள்ளனர். இந்த இறுதி ரிப்போர்ட் கிடைத்த உடன் வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடிப்பார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என சொல்லப்பட்டது. இதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்படப் பலருக்கு பாலிகிராஃப் சோதனைகளை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு இதில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்தது.
அதேநேரம் நிதி மோசடி தொடர்பாக சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். உரிமை கோரப்படாத சடலங்கள் விற்றது, மருந்து மற்றும் மருத்துவ உபகரண சப்ளையர்களிடம் கமிஷன் பெற்றது உள்ளிட்ட புகார்கள் காரணமாக சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications