ப்ளீஸ் விட்டுடுங்க.. காலில் விழுந்து கெஞ்சியும் விடாத கொடூரன்.. கொல்கத்தா மாணவி பலாத்காரம் - ஷாக்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்தில் ஒரு தலைக்காதலை ஏற்க மறுத்த 24 வயது மாணவியை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக தன்னை விட்டு விடும்படி மாணவி காலில் விழுந்து கதறியும் கூட மனம் இறங்காத அந்த கொடூரன் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது உள்பட பல திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் 24 வயது நிரம்பிய மாணவி படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அந்த மாணவியை கல்லூரியின் முன்னாள் மாணவரான 31 வயது நிரம்பிய மனோஜித் மிஸ்ரா விரும்பி உள்ளார். ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமுல் காங்கிரஸ் சத்ரரா பரிஷத்தின் பொது செயலாளராக உள்ளார்.
மாணவியிடம், மனோஜித் மிஸ்ரா தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவி அவரது காதலை ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த மனோஜித் மிஸ்ரா, மாணவியை கல்லூரியில் உள்ள காவலாளி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரது நண்பரான முதலாமாண்டு மாணவர் ஜாயிப் அகமது (19) , 20 வயது நிரம்பிய பிரமித் முகர்ஜி ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜித் மிஸ்ரா, ஜாயிப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோரை கைது செய்தனர். இவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் அந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மனோஜித் மிஸ்ரா மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். மனோஜித் மிஸ்ராவின் காதலை ஏற்க மறுத்ததால் நண்பர்கள் மூலம் மிரட்டி உள்ளார். அதேபோல் அவரை காயப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி மாணவியின் பெற்றோரை பொய் வழக்கில் சிறைக்கு அனுப்புவதாகவும் மிரட்டி வந்தார். கல்லூரியில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றேன். ஆனால் என்னை பிடித்து வைத்து கொண்டான்.
நான் கதறி அழுதேன். என்னை விட்டு விடும்படி கெஞ்சினேன். எனக்கு பாய் பிரண்ட் இருக்கிறான். அவனை தான் விரும்புகிறேன் என்று கூறினேன்.ஆனால் அவன் என்னை விடவில்லை. காலில் கூட விழுந்து கெஞ்சினேன். ப்ளீஸ் என்னை விட்டுவிடும்படி கூறினேன். ஆனால் அவன் விடவில்லை. காவலாளி அறைக்கு தூக்கி சென்று ஆடைகளை கிழித்து பலாத்காரம் செய்தான். அவனுக்கு 2 பேர் உடந்தையாக இருந்தனர்.
மேலும் வீடியோ எடுத்து வைத்தான். அமைதியாக இருக்காவிட்டால் அதனை வெளியிடுவதாக மிரட்டினான். நான் உதவி கேட்டு கத்தியும் யாரும் உதவிக்கு வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியும் கூட அவர்கள் உதவி செய்யவில்லை. கல்லூரியின் மெயின் கேட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்'' என கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தான் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications