For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது

தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இறந்த தாயின் உடலுடன் 18 நாட்கள் வசித்த மகனை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா சிஐடி அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், 'சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் மைத்ரேய பட்டாச்சார்யா அவரது தாயாரின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க தனது உதவியைக் கேட்பதாக’ புகார் தெரிவித்தார்.

kolkata man lives with mothers corpse for 18 days

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மைத்ரேய பட்டாச்சார்யாவைக் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த அவரது தாயின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக 38 வயதான மைத்ரேயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதாவது, மைத்ரேயாவும் அவரது அம்மாவும் வசித்து வந்த வீட்டில் தான் அவரது தந்தை கடந்த 2013ம் ஆண்டு தீவிபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் ஞாபகமாக அந்த வீட்டைப் புதுப்பிக்காமலேயே அவர்கள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 18 நாட்களுக்கு முன்னர் மைத்ரேயாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால், மூடபழக்கவழக்கங்களில் அதிக நம்பிக்கை கொண்டவரான மைத்ரேயா, தாயின் உடலை 21 நாட்களுக்குப் பிறகே புதைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்து விட்டு, தாயின் உடலுடன் அவர் 18 நாட்கள் அதே வீட்டில் இருந்துள்ளார். தன் வீட்டு முற்றத்திலேயே தாயின் உடலைப் புதைக்க வேண்டும் என விரும்பிய அவர், அதற்காக தனது நண்பரின் உதவியை நாடியபோது தான் போலீசில் சிக்கியுள்ளார்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது தாயும் இது போன்ற நம்பிக்கைகளில் அதிக ஆர்வமாக இருந்ததாகவும், எனவே அவரது விருப்பப்படியே தான் நடந்து கொள்ள திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.

English summary
The Kolkata police has detained a 38-year-old man who kept his mother’s maggot-infested body in his possession for 18 days, waiting for an auspicious time to bury her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X