நள்ளிரவில் தாக்கிய 7 பேர்... போலீஸ் உதவிக்கு வரவில்லை - உஷோஷி சென்குப்தா குமுறல்
கொல்கத்தா: நள்ளிரவில் 7 பேர் கொடூரமாக வழிமறித்து தாக்கிய போது காவல்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டனர். உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை என்று பிரபல மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தனக்கு நடந்த வன்முறை சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உஷோஷி சென்குப்தா 2010 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர். இவர் நேற்று வேலை முடிந்து சக பணியாளருடன் திரும்பிக்கொண்டிருந்த போது நள்ளிரவு ஆகிவிட்டது. அப்படியே ஹோட்டலில் டின்னரும் முடித்து விட்டு உபேர் கால் டாக்ஸியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் வந்த வாகனத்தை இடிப்பது போல 4 இருசக்கர வாகனங்களில் வந்தனர். காரை டிரைவர் வேகமாக ஓட்டியும் முந்திக்கொண்டு வந்த அந்த இளைஞர்கள் வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை இழுத்துப்போட்டு அடித்தனர். அதை வீடியோவாக படம் பிடித்தார் நடிகை உஷோஷி.
இதனை அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் : பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் கூறி அப்போது தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
அருகில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் உதவிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள உஷோஷி, வெகு தாமதமாக போலீசார் வந்த போது அந்த நபர்கள் அவர்களை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார்.
இது பெண்களுக்கான பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால் மட்டுமல்ல பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால், நானும், எனது சக பணியாளரும் நள்ளிரவில் பணி முடிந்து வரும் போது துன்புறுத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வீடியோ ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா இணை ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகை மீதான தாக்குதல் புகாரின் பேரில் ஷேக் ராகிட், பர்தின் கான், ஷபீர் அலி, இம்ரான் அலி, வாஸிம், கனி, அஷிப் கான் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications