நான் அறைக்கு போன போதே.. அந்த பெண் இறந்து கிடந்தார்! கொல்கத்தா குற்றவாளி பாலிகிராப் சோதனையில் திடுக்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் நேற்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதாவது உண்மை கண்டறியும் சோதனை. இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு.. அவரின் இதய துடிப்பு, ரத்த கொதிப்பு மாறுதல்களை வைத்து அவர் பேசுவது உண்மையா, பொய்யா என்று சோதனைகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று நடந்த இந்த சோதனையில், நான் அறைக்கு செல்லும் போதே அந்த பெண் உயிரோடு இல்லை.. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே இறந்து கிடந்தாள்.. தான் உள்ளே சென்ற போதே அந்த பெண் இறந்துவிட்டதாக உண்மை கண்டறிதல் சோதனையில் கூறியதாக கூறப்படுகிறது.

kolkata

அதிர்ச்சி தகவல்கள்: ஆனால் பொய் கண்டறிதல் சோதனையில் பல தவறான மற்றும் நம்பமுடியாத பதில்களை அந்த நபர் அளித்ததாக கூறப்படுகிறது. பொய்-கண்டறிதல் சோதனையின் போது சஞ்சய் ராய் பதற்றமாகவும் கவலையுடனும் காணப்பட்டார் என்று கூறப்பட்டு உள்ளது.


சிபிஐ பல ஆதாரங்களுடன் அவரை விசாரணை செய்தது. அதே சமயம் சம்பவம் நடத்த நேரத்தில் தான் வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்களையும் சஞ்சய் ராய் வெளியிட்டு இருக்கிறார். அந்த பெண்ணின் இறந்த உடலை பார்த்தேன்.. இதனால் பயத்தில் வளாகத்தை விட்டு ஓடிவிட்டதாக சஞ்சய் ராய் வாக்குமூலத்தில் கூறினார்.

சிறையில் சொன்னது என்ன?: ஏற்கனவே நான் கொலை செய்யவில்லை.. என்னை ஏமாற்றி கைது செய்துவிட்டனர் .. எனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.

இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

கிழிந்த புளூடூத் இயர்போன் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இவர் அந்த பளூடூத் ஹெட் செட் உடன் அங்கே சுற்றியதை பலரும் பார்த்து உள்ளனர். இதன் மூலமே அவர் சிக்கி உள்ளார். மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடனான தொடர்பு காரணமாக ராய் பல்வேறு மருத்துவமனை துறைகளுக்கு சென்று பல்வேறு பணிகளை செய்துள்ளார். இது போன்ற ஒரு வாய்ப்பிற்காக அவர் இத்தனை காலம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.

kolkata

கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், முன்னதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு இருந்தார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

சிபிஐயிடம் அவர் தந்த வாக்குமூலத்தில், நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. நான் செய்ததை சரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான்தான் தவறு செய்தேன்.. என்னை தூக்கில் போடுங்கள். என்னை தூக்கில் போட்டாலும் தவறுன்னு சொல்ல மாட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+