காங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு- சோனியா அறிவிப்பு!!
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார்.
தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு இணைந்தார்.

காங்கிரஸில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக அக்கட்சித் தலைவர் சோனியா நியமித்துள்ளார். நடிகை குஷ்புவுடன் மொத்தம் 17 பேர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அஜய் மக்கான், சி.பி. ஜோஷி, சத்யாவர்த் சதுர்வேதி, ஷகீல் அகமது ஆகிய 4 பேரை மூத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகவும் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
-
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு!












Click it and Unblock the Notifications