திறமையான நபரையே கட்சி மேலிடம் நியமிக்கும்: சோனியா உடனான சந்திப்பு பற்றி குஷ்பு விளக்கம்
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திறமையான கட்சியை வலுப்படுத்தும் திறன் உள்ள நபரை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமிக்கும் என அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்த பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சோனியா காந்தியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாக கூறிய அவர் யாருக்காகவும் சோனியா காந்தியிடம் பரிந்து பேசவில்லை என்றார்.

செய்தி தொடர்பாளர் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் போது இளங்கோவன் தலைவராக இருந்த போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்புடன் இயங்கியது என்று கூறிய குஷ்பு, கடந்த தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
தான் எப்போதுமே ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆதரவாளர்தான் என்று கூறிய குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனை மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க கோரி வலியுறுத்தவில்லை என்றும் கூறினார். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திறமையான கட்சியை வலுப்படுத்தும் திறன் உள்ள நபரை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமிக்கும் என்றார்.
இணையம் துறைமுகத்திற்கு உள்ளூர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர் இது குறித்து காங்கிரஸ் தலைமை உரிய விளக்கம் அளிக்கும் என்றும் குஷ்பு கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications