ஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க பாஜக, காங். கோரிக்கை
லே: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க வேண்டும் என்று பாஜக, காங். உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு 2019-ம் ஆண்டு ரத்து செய்யபட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம்
இதில் ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.

டெல்லி பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி இன்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் 14 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டசபை கோரிக்கை
இதனிடையே ஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. லேவில் நேற்று நடைபெற்ற பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

அமித்ஷாவிடம் வலியுறுத்த முடிவு
இது தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் லடாக் அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அத்துடன் டெல்லியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைகளை கவனித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் லடாக் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications