லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி ராகுல் நோட்டீஸ்

உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக் கோரி லோக்சபாவில் ராகுல் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.

Subscribe to Oneindia Tamil

உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக் கோரி லோக்சபாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதேபோ உ.பி. மாநிலம் லக்கிம்பூரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கடந்த அக்டோபர் 3-ந் தேதி லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 விசாரணை குழு அறிக்கை

விசாரணை குழு அறிக்கை

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக உ.பி. மாநிலா அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக் குழு, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை ஒரு திட்டமிட்ட படுகொலை சதி என பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

 லோக்சபாவில் ராகுல்

லோக்சபாவில் ராகுல்

நாடாளுமன்றத்தில் இன்று இச்சம்பவம் எதிரொலித்தது. லோக்சபாவில் லக்கிம்பூர் படுகொலை தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை அறிக்கையை முன்வைத்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை திட்டமிட்ட சதி என்கிறது விசாரணை குழு. தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதான வழக்கை திட்டமிட்ட படுகொலை என்கிற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்றும் விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

 மத்திய இணை அமைச்சரை நீக்குக

மத்திய இணை அமைச்சரை நீக்குக

இப்படுகொலை சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவும் குற்றவாளி. ஆகையால் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனே டிஸ்மிஸ் செய்யவேண்டும். அஜஸ் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்து பாதிக்கப்பட்ட் விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

 வலுக்கும் டிஸ்மிஸ் குரல்

வலுக்கும் டிஸ்மிஸ் குரல்

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராகுல் காந்தி முதலில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இப்போது லோக்சபாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு ராகுல் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். இதேபோல் லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் அஜஸ் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+